பிளே ஆப் சுற்றில் சிஎஸ்கே

துபாய்: ஐபிஎல்லில் நேற்று நடந்த போட்டியில் கேகேஆரை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றை உறுதி செய்தது. நேற்றைய வெற்றிக்கு பின் டோனி கூறுகையில், இது ஒரு நல்ல வெற்றி, சில நேரங்களில் சிறப்பாக ஆடி தோல்வி அடைகிறோம். இன்று நன்றாக ஆடி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த போட்டி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும்.

யுஏஇயில் தொடர்ச்சியாக 6 வெற்றி பெற்றுள்ளோம். முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் வலுவாக வர வேண்டும், என்றார்.

Related Stories:

>