பைக் மீது லாரி மோதி கம்பெனி மேலாளர் பலி

ஆவடி: சென்னை புரசைவாக்கம் தானா தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(51). இவர், ஆவடி அடுத்த காட்டூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை தனியார் கம்பெனி மேலாளர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். காட்டூர் தொழிற்பேட்டை பார்க் சாலையில் வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார்  துளசிதாஸ்(58) என்பவரை கைது செய்தனர்.

Related Stories:

>