திருத்தணியில் உரிமம் இல்லாத வாகனங்களுக்கு அபராதம்: அதிகாரிகள் அதிரடி சோதனை

திருத்தணி: சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் ஆகியோரின் உத்தரவின்படி, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி தலைமையில் நேற்று முன்தினம் திருத்தணியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது காசிநாதபுரம் கூட்டுச்சாலையில் அதிகபாரம் ஏற்றி வந்ததாக 5 வாகனங்கள், உரிமம் இல்லாமல் இயங்கியதாக தனியார் கம்பெனி வாகனங்கள் மற்றும் அதிவேகமாக வந்த வாகனங்கள் என்று மொத்தம் 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் இருந்து அபராதமாக 75 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. 1.50 லட்சம் அபராதம் விதித்தனர். சாலை விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முககவசம் அணியவேண்டும். தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Related Stories: