பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைப்பு - வேளாண் சட்டங்களை ரத்து செய்யாததை கண்டித்து திமுக, கூட்டணி கட்சியினர் போராட்டம்-ஒன்றிய அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி கோஷம்

மதுரை : ஒன்றிய அரசு 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி ஏந்தி கண்டன போராட்டம் நடந்தது.

*மதுரை வடக்கு, தெற்கு தொகுதி சார்பில் அண்ணாநகரில் நடந்த போராட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர்பொன்.முத்துராமலிங்கம், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கோ.தளபதி எம்எல்ஏ, வெங்கடேசன் எம்பி புதூர் பூமிநாதன் எம்எல்ஏ, முன்னாள் மேயர் குழந்தை வேலு, மாநகர் மாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திய - மேற்கு தொகுதி மகபூப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராஹிம் தலைமை வகிக்க, சிபிஎம் மாநகர செயலாளர் விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ், திமுக முன்னாள் மேயர் மிசா. பாண்டியன், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் நந்தாசிங், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மதிமுக தொழிற்சங்க மாநில இணை பொது செயலாளர் மகபூப் ஜான், விசிக மாவட்ட செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெற்கு மாவட்டம் சார்பில் பெரியார் பஸ்நிலையம் அருகே போராட்டத்தில் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமன் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.

*திருமங்கலம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகிக்க, நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் தனபாண்டி, அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் பேச்சிம்மாள், அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, சுரேஷ்குமார், தங்கபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கப்பலூரில் நடந்த ேபாராட்டத்திற்கு அவைத்தலைவர் சந்திரன் தலைமை வகிக்க, சிபிஎம் துணைத்தலைவர் ஜெயராமன், சிபிஐ சந்தானம் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் ரஞ்சித்குமார், கிளை தலைவர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் நகர செயலாளர் அனிதா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செயலாளர் மாரிச்சாமி, அவைத்தலைவர் திருப்பதி, பிரதிநிதி வையதுரை உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.

*சோழவந்தான் அருகே குருவித்துறையில் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், இளைஞரணி வெற்றிச்செல்வன், மன்னாடிமங்கலத்தில் விவசாய அணி முருகன், அய்யப்பநாயக்கன் பட்டியில் தமிழ், முள்ளிப்பள்ளத்தில் ஊராட்சி துணை தலைவர் ராஜா, சந்தான லெட்சுமி, தென்கரையில் சோழராஜன், ஊத்துக்குளியில் ராஜாராமன், மேலக்காலில் சுப்பிரமணியன், திருவேடகத்தில் ராஜா என்ற பெரியகருப்பன், நீலமேகம் உள்ளிட்டோர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சோழவந்தான் நகர் சங்கங்கோட்டையில் பேரூர் செயலாளர் முனியாண்டி, வைத்தியநாதபுரத்தில் பொதுக்குழு உறுப்பினர் தர், கிளை செயலாளர் திருப்பதி, தொண்டரணி ரமேஷ், விவசாய அணி சேகர், தெற்கு ரதவீதியில் மாவட்ட பிரதிநிதி கண்ணன், தவமணி, ஜெயராமன், நாகேந்திரன், கீழப்பச்சேரியில் சிற்றரசு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் வீடுகள் முன் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், பூங்கொடி, உமாதேவி, பவுன் முருகன், ஈஸ்வரி, சிறுமணி, சகுபர் சாதிக், கவிதா, பழனியம்மாள் ஆகியோர் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

*திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு நடந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் திமுக பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டி, நிர்வாகிகள் ஆறுமுகம், ரமேஷ், ரவி, மதிமுக முருகேசன், பாண்டியன், அழகர், காங்கிரஸ் மகேந்திரன், நாகேஸ்வரன், சண்முகநாதன், சிபிஐ முத்துவேல், சிபிஎம் பாண்டி, பொன் கிருஷ்ணன், தியாக ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநகரில் மாணிக்கம் தாகூர் எம்பி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன், முருகன், சுப்பிரமணியன், ராஜ்குமார், பழனிக்குமார், சரவணபகவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*அலங்காநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் சுப்பாராயலு தலைமை வகிக்க, வடக்கு வட்டார தலைவர் காந்தி, மனித உரிமை மாவட்ட தலைவர் ஜெயமணி, வட்டார தலைவர் சரந்தாங்கி முத்து முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வேலாயுதம், நிர்வாகிகள் தனுஷ்கோடி, முரளி பாலமுருகன், தவமணி, அய்யங்காளை, கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி பார்வதியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*வாடிப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக முன்னாள் பேரூர் செயலாளர் பால் பாண்டியன் தலைமை வகிக்க, நிர்வாகிகள் கருப்பையா, கார்த்திக், திரவியம், முரளி, கலைஞர்தாசன், சிவா, ராகுல் சர்வேஷ், பிரபு, காங்கிரஸ் நிர்வாகிகள் செல்வக்குமார், முருகானந்தம், கணேசன், குருநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் குருசாமி தலைமையில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சோனைமுத்து, இளைஞர் காங் நிர்வாகிகள் ராம்ராஜ், கண்ணன், சரவணன், ெதாகுதி தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*மேலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் முகமது யாசின், சிபிஎம் நகர செயலாளர் மணவாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*உசிலம்பட்டியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் தலைமை வகிக்க, விவசாய பிரிவு செயலாளர் லிங்கம், தொழிற்சங்கம் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அஇபாபிக சார்பில் மாவட்ட செயலாளர் ராஜா, மாநில செயலாளர் பாஸ்கரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை சார்பல் மாவட்ட செயலாளர் விடுதலை சேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: