டெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட், 20 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட், அண்மையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அப்போது ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசின் திட்டம் ஒன்றுக்கு விளம்பர தூதரக சோனு சூட் நியமிக்கப்படுவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். இந்நிலையில் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.