71 தீபங்கள் ஏற்றி பிரார்த்தனை, 71 கிலோ லட்டு, 71 அடி நீள கேக் : பிரதமர் மோடியின் பிறந்தநாள் உற்சாக கொண்டாட்டம்!!

டெல்லி : பிரதமர் மோடி இன்று 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.சென்னையில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மோடியின் 71வது பிறந்தநாள் மற்றும் பொது வாழ்க்கைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜகவினர் 20 நாட்கள் பொது நிகழ்வாக கொண்டாட உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக மெகா தடுப்பூசி முகாம்களும் நடைபெறுகின்றன. பொதுமக்கள் தடுப்பூசி போட முன்வருவதே பிரதமர் மோடியின் பிறந்தநாள் பரிசு என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.வாரணாசியில் மோடியின் பிறந்த நாளை ஒட்டி புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரூபா கங்குலி உள்ளிட்ட பாஜகவினர் 71 கிலோ லட்டு வெட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வாரணாசி மக்களவைத் தொகுதியில், மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இரவில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன.போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பா.ஜ.க.வினர் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.மோடி பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் கொண்டாடிவரும் பா.ஜ.க.வினர், இந்தாண்டு அதிகளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>