ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் எம்.மகேந்திரன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் விஜயன், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், அலுவலக ஆய்வுக் கூட்டங்களை அலுவலக நேரத்தில், அலுவலக நாட்களில் நடத்த வேண்டும், சனி, ஞாயிறு உள்பட விடுமுறை நாட்களில் ஊழியர்களை பணி செய்ய நிர்ப்பந்தம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும்.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற உள்ளாட்சி துறை பணியாளர்களுக்கு அரசு வழங்கும் ரூ.2 லட்சம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். கொரோனாவால் இறந்த ஊராட்சி செயலாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>