திமுக எம்எல்ஏ நந்தகுமார், கண்ணையா உட்பட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவுக்கு 25 உறுப்பினர்கள் நியமனம்: மேலும் 50 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்ப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ நந்தகுமார், எஸ்ஆர்எம்யூ ரயில்வே பணியாளர் சங்கத்தின் தலைவர் கண்ணையா உட்பட 25 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா சுப்பா ரெட்டி 2வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். தற்போது இதற்கு 25 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதில், தமிழகத்தின் சார்பில் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார், இந்தியா சிமென்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன், எஸ்ஆர்எம்யூ ரயில்வே பணியாளர்கள் சங்கத் தலைவர் கண்ணையா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், தங்கள் மாநிலத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும்படி ஆந்திர அரசை பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி உள்ளன. இதனால், இந்த அறங்காவலர் குழுவில் முதல் முறையாக கூடுதலாக 50 பேர் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்படுகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கொள்கை முடிவு ஆலோசனை கூட்டங்களில் இந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க முடியாது. திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றில் முதல் முறையாக அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 75 பேர் கொண்ட மெகா அறங்காவலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

* உறுப்பினர்கள் யார், யார்?

தழிழ்நாடு: அணைக்கட்டு தொகுதி எம்ம்எல்ஏ நந்த குமார், இந்தியா சிமென்ட் சீனிவாசன், எஸ்ஆர்எம்யூ சங்கத்தின் கண்ணையா.

ஆந்திரா: போகலா அசோக் குமார், மல்லாடி கிருஷ்ணா, வேமிரெட்டி பிரசாந்தி, கோலா பாபு, புர்ரா மதுசூதன், கடசானி ராம்பூபால்.

தெலங்கானா: ராமேஸ்வரன், பார்த்தசாரதி, லட்சுமி நாராயணா, மாறன் செட்டி ராமுலு, வித்யா சாகர், மன்னே ஜீவன், ராஜேஷ் சர்மா.

கர்நாடகா: சசிதர், சங்கர், எம்எல்ஏ விஸ்வநாத்.

மேற்கு வங்கம்: சரூப், மாருதி, ஆடிட்டர் சனத், என்.எஸ்.என். லேப்ஸ் ஜீவன், கேதன் தேசாய்.

மகாராஷ்டிரா: மிலிந்த்.

Related Stories: