தோகைமலை, அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 136 முகாம்களில் 17,652 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தோகைமலை : தோகைமலை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்களில் 66 முகாம்கள் அமைக்கப்பட்டு 8152 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழக அரசின் வழிபாட்டுதலின்படி கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவையடுத்து சுகாதாரத்துறை சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடந்தது.

இதில் தோகைமலை ஒன்றியங்களில் உள்ள சின்னையம்பாளையம், கழுகூர், நாகனூர், பொருந்தலூர், தோகைமலை, பாதிரிபட்டி, கல்லடை, கூடலூர், கள்ளை, புத்தூர், வடசேரி, பில்லூர், புழுதேரி, ஆர்டிமலை, ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி ஆகிய 20 ஊராட்சிகளில் 66 மையங்கள் அமைக்கப்பட்டது.20 ஊராட்சிகளில் நடந்த சிறப்பு முகாமிற்கு அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ ராமர், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு சிறப்பு முகாம்களை தொடங்கி வைத்தார். இதில் அனைத்து ஊராட்சி பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் இருந்து 8152 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் பொன்னுச்சாமி, மகேஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து ஊராட்சி மன்ற செயலர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் 70 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 9500 பேர் ஆர்வத்துடன்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கொரோனாவை முற்றிலும் தடுப்பதற்காக கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் பள்ளபட்டி உள்ளிட்ட இடங்களில், மாவட்ட கோட்டாச்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டு, கொரோனா தடுப்பூசி போட வேண்டியதின் அவசியம் பற்றிய விழிப்புனர்வு மற்றும்‘ஏற்பாடு செய்யப் பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளஅறிவுறுத்தல் கூட்டம் நடை பெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

நேற்றுஅரவக்குறிச்சி ஒன்றியம் பள்ளபட்டி பேருராட்சியில் 10 இடங்கள், அரவக்குறிச்சி பேருராட்சியில் 3 இடங்கள், ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகளில் 57 இடங்கள் என ஒன்றியம் முழுவதும் 70 இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 9500 பேர் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.முன்னதாக பள்ளபட்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார்.இதன்படி அரவக்குறிச்சி ஒன்றியத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 9500 பேர் ஆர்வத்துடன்கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

குளித்தலை:

தமிழக மக்களை கொரோனோ வைரஸிலிருந்து காப்பாற்ற தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சிறப்பு தடுப்பூசி முகாம் குளித்தலை நகராட்சி அமல ராக்கினி பள்ளி, சிஎஸ்ஐ ஊராட்சி ஒன்றியபள்ளி, எம்பிஎஸ் அக்ரஹாரம், பேருந்து நிலையம், அண்ணா மண்டபம், பெரியார் நகர், பெரிய பாலம், பிள்ளையார் கோயில், அண்ணா நகர், பாரதி நகர், கொல்லம்பட்டறைத் தெரு, கடம்பர் கோயில், தெற்கு மனதட்டை அக்கரகாரம், மலையப்ப நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

முகாமில் ஒரே நாளில் நகராட்சியில் 2630 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .

முன்னதாக நேற்று காலை குளித்தலை சுங்கவாயிலில் கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்புமுகாமினை எம்எல்ஏ மாணிக்கம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் பொறுப்பு ராதா, நகர்ப்புற மருத்துவ அலுவலர் அமீர்தீன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பல்லவி ராஜா ,கட்டிட பொறியாளர் சங்க தலைவர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் தொகுதி பொறுப்பாளர் வி.பி சேகர், சுகாதார பணியாளர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: