பாதுகாப்பு படையினருக்கு தலிபான்களை எதிர்க்க விரைவில் சிறப்பு பயிற்சி: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: தலிபான்களை எதிர்க்க எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு புதிய உத்திகளுடன் கூடிய சிறப்பு பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அவர்களால் காஷ்மீர் உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஒன்றிய உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன. எனவே, தலிபான்களை எதிர்ப்பது, அவர்களின் தாக்குதல்களை முறியடிப்பது குறித்து பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஒன்றிய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, எல்லை பாதுகாப்பு படையினர், எஸ்எஸ்பி மற்றும் மாநில போலீஸ் பிரிவுகள் போன்ற எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு புதிய உத்திகளுடன் கூடிய பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது. அதிநவீன ரக குண்டுகளை கண்டறிதல், செயலிழக்கச் செய்தல் குறித்தும் சிறப்பு பயிற்சிகள் சேர்க்கப்பட உள்ளன. ஆப்கானில் நேட்டோ படைகள் மீது தலிபான்கள் நவீன வெடிகுண்டுகளை கொண்டு அடிக்கடி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதே போல், ஒன்றிய மற்றும் மாநில போலீஸ் படைகளின் பல்வேறு கட்ட பயிற்சி மையங்களிலும் இதுபோன்ற சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும் எனவும் துணை ராணுவப்படை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: