9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி: திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோயிலில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று அளித்த பேட்டி:  ஊரக வளர்ச்சித்துறை மூலம் இதுவரை 11.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதியை தமிழக தேர்தல் ஆணையம் 13ம்தேதி அறிவிக்க உள்ளது. தமிழகத்தில் 30 நகராட்சி, 6 மாநகராட்சிகள் தற்போது கூடுதலாக உள்ளது.

வார்டு மறுவரையறை செய்து வருகிறோம். மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறை செய்து அறிவிப்பு வெளியிடுவோம். 100 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் மீண்டும் வரையறை செய்து அறிவிக்க வேண்டும். அடுத்த அறிவிப்புக்கு 30 நாள் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். ஆட்சேபனைக்கான கால அவகாசமே 130 நாட்கள் ஆகிவிடும். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சியுடன் இணைய ஊராட்சிகள் சம்மதம் தேவை மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைய ஊராட்சி மன்ற தலைவர் சம்மதம் கொடுத்தால் மட்டுமே அந்த ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும். ஒத்துக்கொள்ள மறுத்தால் சேர்க்கப் போவதில்லை.

Related Stories: