அசாம் படகு விபத்தை கண்டித்து நடுரோட்டில் அமைச்சரை உட்கார வைத்த மக்கள்

மஜுலி: அசாமில் நடந்த படகு விபத்தை கண்டித்து, அமைச்சரை நடுரோட்டில் உட்கார வைத்த மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அசாம் மாநிலம், ஜோர்கத் மாவட்டத்தில் நிமதி காட் பகுதியில் இருந்து மஜுலியை நோக்கி பிரம்மபுத்திரா நதியில் 90 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் படகு, அரசு படகுடன் நேருக்கு நேர் மோதியதில் 2 படகுகளும் கவிழ்ந்தன. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழந்து மூழ்கினர். அவர்களில் 87 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். ஒருவரை காணவில்லை.  

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தை பார்வையிடுவதற்காக முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் மஜுலிக்கு சென்றார். அதற்கு முன்பாகவே, மாநில மின்துறை அமைச்சர் பிமல் போரா அங்கு சென்றார். கார்முர் சாரியாலி பகுதி வழியாக அவரது கார் சென்ற போது அதை வழிமறித்த மக்கள், அவரை காரில் இருந்து இறக்கி நடுரோட்டில் உட்கார வைத்து போராட்டம் நடத்தினர். , போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதன் பிறகு, பிமல் போராவை மீட்ட போலீசார், அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட முதல்வர் பிஸ்வாஸ், அந்த ஆற்றில் இனிமேல் ஒற்றை இன்ஜின் படகுகளை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Related Stories: