புதுவையில் ராஜ்யசபா எம்பி பதவிக்கு அக்.4ல் தேர்தல்: என்.ஆர்.காங்.- பாஜ இடையே மோதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுகவை சேர்ந்த ராஜ்யசபா எம்பி கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்பியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 15ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 22ம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாள். 23ம் தேதி மனுக்கள் பரிசீலனை, வாபஸ் பெற 27ம் தேதி கடைசி நாள். போட்டி இருந்தால் அக். 4ம் தேதி தேர்தல் நடக்கும்.

புதுச்சேரி சட்டசபையில் 30 எம்எல்ஏக்களில் என்.ஆர் காங்கிரஸ் 10, பாஜக 6, பாஜக ஆதரவு சுயேச்சைகள் 3 என 19 பேரும், எதிர்க்கட்சி வரிசையில் திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 3 என 11 பேரும் உள்ளனர். இதில் பாஜகவின் 3 நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியாது. என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் காய் நகர்த்தி வருகிறார். ஒன்றிய அமைச்சர் முருகன், புதுச்சேரியில் ராஜ்யசபா எம்பிக்கு பாஜ சார்பில் போட்டியிடலாம் என கூறப்படுவதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: