ஊத்துக்கோட்டை அருகே திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலம்

ஊத்துக்கோட்டை: தாராட்சி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் ஸ்ரீதிரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் தீமிதி திருவிழா  கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து  2வது நாள் பக்காசூரன் வதம், இதை தொடர்ந்து 3ம் நாள் திருக்கல்யாணம், 4ம் நாள் நச்சி குழியாகம், 5ம் நாள் அரக்கு மாங்கோட்டை, 6வது நாள் அர்ஜூனன் தபசு, 7வது நாள் தர்மராஜா வீதியுலா, 8வது நாள் மாடுபிடி சண்டை, 9ம் நாள் துரியோதனன் படுகளம் நடந்தது.

மேலும், 10வது நாளான நேற்று முன்தினம் மாலை கிராம எல்லையிலிருந்து உற்சவரான திரவுபதி அம்மன் டிராக்டரில் ஊர்வலமாக வந்து தீமிதிக்கும் இடமான கோயில் வளாகத்திற்கு வந்தது. உடன் காப்பு கட்டி மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் முகக்கவசம் அணிந்து  100க்கும் மேற்பட்டோர்  அம்மனுடன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். கடைசி நாளான நேற்று அரவான் இறுதி சடங்கு நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராட்டுடன் விழா முடிந்தது. இந்நிகழ்ச்சியில், கிராம மக்கள் உள்ளிட்டோர் சமுக இடைவெளியுடன்,  முகக்கவசம் அணிவித்து கலந்துகொண்டனர்.

Related Stories: