பெரம்பலூரில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மகளிர் காவலர்களுக்கு பாராட்டு: சான்றிதழ், வெகுமதி எஸ்பி வழங்கினார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ், வெகுமதி வழங்கினார். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்த ராஜ் (38). இவர் மனைவியுடன் பெரம்பலூர் துறைமங்கலம், நியூகாலனியில் வசித்து வந்தார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன் அதே பகுதியிலுள்ள வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமியையை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப் பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்தராஜை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார். அதனைத் தொ டர்ந்து அவரது குற்றங்களை விரைந்து நிரூபித்து 10 நாட்களில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுத்தார். இதில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, ஏட்டு செல்வ ராணி ஆகியோர் பெற்று தந்தனர்.

பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தின்கீழ் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்ட குன்னம் தாலுகா வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த கருப்பையா (23) என்பவருக்கு 2019 அக்டோபர் 4ம் தேதி, மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் கருப்பையாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கருப்பையா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருப்பையாவுக்கு விதித்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த கருப்பையாவை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து, சப்.இன்ஸ்பெக்டர்கள் விஜயலெட்சுமி, மாறன், போலீஸ் லெட்சுமி ஆகியோர் கருப்பையாவை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர். தலைமறைவு குற்றவாளியை விரைந்து கைது செய்து சிறையிலடைத்த அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்.இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி, ஏட்டு லெட்சுமி ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி செயலுக்கு தமிழக ஏடிஜிபி (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு) வன்னிய பெருமாள், திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ராதிகா ஆகியோர் ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தனர். நேற்று பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சி ஏடிஎஸ்பி பாண்டியன் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: