நிதி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை சம்மன்; 2 குழந்தைகளுக்கு தாய் நான் விசாரணைக்கு வர முடியாது: மம்தா மருமகனின் மனைவி கடிதம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த நிலக்கரி ஊழல் நிதி மோசடி வழக்கில், மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகனும், எம்பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா அமலாக்கத்துறை முன்பாக நேற்று ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ருஜிரா நேற்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக, அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சுமந்த் பிரகாஷ் ஜெயினுக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ‘நான் இரண்டு குழந்தைகளின் தாய். கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில் நான் டெல்லிக்கு பயணம் செய்தால், எனக்கும், என் குழந்தைக்கும் பெரும் ஆபத்து ஏற்படும். நான் கொல்கத்தாவில் வசிப்பதால், இங்கு உள்ள உங்கள் அலுவலகத்தில் ஆஜராகும்படி கேட்டால் எனக்கு வசதியாக இருக்கும். என் தரப்பில் இருந்து அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: