சீர்காழி, வேதாரண்யம் பகுதியில் முருகன் கோயில்களில் ஆவணி கிருத்திகை வழிபாடு

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி தையல் நாயகி அம்பாள் உடனாகிய திருக்கோயில் அமைந்துள்ளது. செவ்வாய் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தன்வந்திரி சித்தர் இக்கோயிலில் ஜீவசமாதி அடைந்துள்ளார். இத்தகைய புகழ்பெற்ற கோயிலில் ஆவணி மாத கார்த்திகை விழாவை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் செல்வமுத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்பு தருமபுர ஆதீனம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அப்போது காசி மடத்து அதிபர் காசி வாசி சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் உடன் இருந்தனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் ஆவணி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதுபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாரதணை நடைபெற்றது. இதுபோல், தோப்புத்துறை கைலாசநாதர் கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோயிலில் முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோயில் சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

Related Stories: