கிழக்கு கோதாவரி மாவட்டம் அந்தர்வேதியில் 2 கிலோ மீட்டர் தூரம் கடல் உள்வாங்கியது-மீனவர்கள், பொதுமக்கள் அச்சம்

திருமலை : ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், அந்தர்வேதி கடற்கரையில் விசித்திரமான சூழல் நிலவி வருகிறது.  அந்தர்வேதி கடற்கரை என்பது கோதாவரி ஆறு வங்க கடலில் கலக்கும் இடமாகும்.  இங்கு கடந்த சில நாட்களாக கடல் முன்னோக்கி வந்தபடி உள்ளது. தொடர்ந்து அலைகள் மக்களை பயமுறுத்தும் வகையில் எழுச்சியுடன் வந்தது.

ஆனால் நேற்று திடீரென 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் கடல் உள்வாங்கி பின்னோக்கிய நிலையில் அலைகள் இருந்தது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் தொடர்ந்து முன்னோக்கியும், சில இடங்களில் பின்னோக்கியும் செல்வதால் பொதுமக்கள், மீனவர்கள் பீதியடைந்துள்ளனர். வழக்கமாக  கடல் அலைகள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் முன்னோக்கி செல்லும். அதன்படி, நேற்றுமுன்தினம் 45 மீட்டருக்கு முன்னோக்கி வந்தது. ஆனால், நேற்று கடல் அலை 2 கிலோ மீட்டருக்கு உள்வாங்கியதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

Related Stories: