விசாரணைக்கு ஆஜராகுமாறு ஒன்றிய அமைச்சர் ரானேவுக்கு நோட்டீஸ்: முதல்வர் உத்தவ் மீது பாஜ பதிலடி புகார்

மும்பை:  கடந்த திங்கள் கிழமை ராய்கட்டில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு நாடு சுந்திரம் அடைந்து இது எத்தனையாவது ஆண்டு என்றே தெரியவில்லை. இதனால் பேச்சின் நடுவே பின்னால் திரும்பி உதவியாளரிடம் இது எத்தனையாவது சுதந்திர தினம் என்று கேட்டார். உதவியாளர் 75வது ஆண்டு என்று சொன்னதும் முதல்வர் தனது உரையை தொடர்ந்தார் என்றும், அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் முதல்வரின் கன்னத்தில் அறைந்திருப்பேன், என்றார். அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் சிவசேனாவினர் போராட்டத்தில் குதித்தனர்.

ரானேவுக்கு எதிராக சிவசேனாவினர் கொடுத்த புகார்களின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரானேவை கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு நாசிக் போலீசார் ரானேவுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதற்கிடையே, கடந்த ஆண்டு அக்டோபர் 25ம் தேதி தசரா விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை செருப்பால் அடிப்பேன்’ என்று பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், யவத்மால் மாவட்ட பாஜ தலைவர் நிதின் புத்டா சார்பில் உமர்கட் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: