சின்னாளபட்டி அருகே ரோஜா செடி பயிரிட விவசாயிகள் ஆர்வம்

சின்னாளபட்டி : சின்னாளபட்டி அருகே வெள்ளோடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் ரோஜா பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது தற்போது அவை கவாத்து பார்க்கப்பட்டு மொட்டுவிட்டு மலரும் நிலையில் உள்ளன.சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை, ஊத்துப்பட்டி, காமலாபுரம், பெருமாள்கோவில்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் பூ விவசாயிகள் சம்பங்கி, செவ்வந்தி, மல்லிகை, ஜாதிப்பூ, செண்டுப்பூக்களை பயிரிட்டு வருகின்றனர். ரோஜாப்பூ ரகத்தில் பட்டு ரோஜா, ஒசூர் ரோஜா, சிவப்பு ரோஜா உட்பட ரோஜா செடிகளை வெள்ளோடு, ஊத்துப்பட்டி, அமலிநகர் பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர்.

தற்போது வெள்ளோடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ள ரோஜா செடிகளில் கவாத்து பார்க்கப்பட்டு மொட்டுவிட்டு பூக்கள் விழும் நிலையில் ரோஜா செடிகள் உள்ளன. மாலைகள், டெக்கரேசன் வேலைகள், வரவேற்பு தட்டிகளுக்கு ரோஜாப் பூக்களை பயன்படுத்துவதால் எப்போதும் ரோஜாப்பூக்களுக்கு தனி மவுசு உண்டு. இதனால் ரோஜா செடிகளை வெள்ளோடு பகுதியில் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: