ஆன்லைன் விளையாட்டில் மோசடி பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி: அறிவுரை கழகம் உத்தரவு

சென்னை: ஆன்லைன் விளையாட்டு மோசடி பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை  உறுதி செய்து அறிவுரை கழகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள குண்டர் சட்டத்தில் கைதானவர்களுக்கான அறிவுரை கழகத்துக்கு மதன் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் அறிவுரை கழகத்தின் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் மலைசுப்பிரமணியம், மாசிலாமணி, ரகுபதி ஆகியோர் முன்பு வாதிட்டனர். அப்போது மதன், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டை நான் விளையாடவில்லை.

சீன செயலி தான் தடை செய்யப்பட்டுள்ளது. கொரியா வெர்ஷன் ஆன்லைன் விளையாட்டை தான் விளையாடி பதிவேற்றினோம். குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவிற்கு தவறு செய்யவில்லை என்றார். மேலும் அவரது மனைவி கிருத்திகாவும் அறிவுரை கழகத்தில் தனது விளக்கத்தை கொடுத்தார். இந்நிலையில் அறிவுரை கழகம் மதன் மீதான குணடர் சட்டத்தை உறுதி செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி மதனின் குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: