கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முதலில் 4 ஆட்டங்களை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் ஒரு ஆட்டத்தில் பாக் போராடி வெல்ல, மீதி 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன. அதனால் பாக் டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 2 டெஸ்ட் ஆட்டங்களை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கிங்ஸ்டன்னில் நடந்த முதல் டெஸ்ட்டில் வெ.இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் ஆட்டமும் அதே கிங்ஸ்டன்னில் இன்று தொடங்குகிறது.