மோகன்லால், மம்மூட்டிக்கு கோல்டன் விசா: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சினிமா உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், முக்கிய தொழிலதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த விசாவின் காலாவதி 10 வருடங்கள் ஆகும். இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல மலையாள நடிகர்களான மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. விரைவில் 2 பேரும் துபாய் சென்று இந்த விசாவை வாங்குகின்றனர். 2 பேருக்குமே துபாயில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மோகன்லாலுக்கு புர்ஜ் கலிபாவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: