தூத்துக்குடியில் காட்டுப்பகுதியில் கிடந்த பெருமாள், அம்மன் சிலைகள் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் காட்டுப் பகுதியில் கிடந்த பெருமாள் மற்றும் அம்மன் சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியில் இருந்து திரேஸ்நகர் செல்லும் பகுதியில் உள்ள முட்புதர்களுக்கு இடையே நேற்று 2 சிலைகள் கிடந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதில் கருங்கல்லால் ஆன அம்மன் சிலை தலை உடைந்த நிலையில் இரு துண்டுகளாகவும், மரத்தால் ஆன பெருமாள் சிலையும் இருந்தது. இவை சுமார் 2 அடி உயரம் கொண்டதாக காணப்பட்டது. இவை கோயில்களில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதற்கான அடையாளமாக குங்குமம் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மீட்ட தாளமுத்துநகர் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவை எங்கிருந்தும் கடத்தி வரப்பட்டதா அல்லது வேறு பிரச்னைகளுக்காக இங்கு கொண்டு வந்து போடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வரும் போலீசார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

Related Stories: