ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் என்று உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைன் மூலம் விசா பெறலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்ததால் அப்பகுதி முழுவதும் போர்களமாக மாறி பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

இந்தநிலையில் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிகழ்வதால் இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏர் இந்திய விமானம் மூலமாக காபூலில் இருந்து முதற்கட்டமாக 129 பயணிகள் இந்தியா திரும்பினார்.

அதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு விமானம் மூலம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என 120 பயணிகளுடன் இந்தியா புறப்பட்டது. இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா திரும்ப ஆன்லைன் மூலம் விசா பெறலாம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதாவது, e-Emergency x-misc visa என்ற நடைமுறையால் இந்தியர்கள் விரைவில் விசா பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Related Stories: