பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான சுங்க வரியை குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை: நிர்மலா சீதாராமன்

டெல்லி: பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை. எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்புடையதே, ஆனால் மத்திய மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை தீர்வு இல்லை. ரூ.1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது.

காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பாத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தியுள்ளது. 2026க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும். வட்டி முழுவதும் செலுத்திவிட்டாலும் அசல் தொகை ரூ.1.30 லட்சம் கோடி பாக்கி இருக்கும் எனவும் கூறினார்.

Related Stories: