உ.பி சட்டப் பேரவை தேர்தலில் யோகியை எதிர்த்து மாஜி ஐபிஎஸ் அதிகாரி போட்டி: மனைவி அதிரடி அறிவிப்பு

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி போட்டியிடப் போவதாக அவரது மனைவி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் இந்திய போலீஸ் சேவை (ஐபிஎஸ்) அதிகாரி அமிதாப் தாக்கூர், தனது பணிக்காலத்திற்கு முன்னதாக கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 23ம் தேதி, பொது நலன் அடிப்படையில் அமிதாப் தாக்கூருக்கு கட்டாய ஓய்வு  அளிக்கப்பட்டதாக அறிவித்தது. வரும் 2028ம் ஆண்டு வரை பணியாற்ற வேண்டிய அவர், தற்போது கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார். இவர், கடந்த 2017ம் ஆண்டில் தனது  பணியாளர் நிலையை மாற்றி அமைக்குமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமிதாப் தாக்கூரின் மனைவி நூதன் கூறுகையில், ‘வருகிற சட்டப் பேரவை தேர்தலானது சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டமாக இருக்கும். தற்போது முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத் காலத்தில் ஜனநாயகமற்ற, முறையற்ற, அடக்குமுறை, துன்புறுத்தும் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, எனது கணவர் (அமிதாப் தாக்கூர்) வருகிற தேர்தலில் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: