கர்நாடகாவில் ஒரு சிங்கப்பெண் போலீஸ் எஸ்ஐ தேர்வில் கர்ப்பிணி பெண் வெற்றி: 400 மீட்டர் தூரத்தை 1.36 நிமிடத்தில் கடந்தார்

பெலகாவி: கர்நாடகா மாநிலம்  பீதர் மாவட்டம், பால்கி தாலுகாவை சேர்ந்தவர் அஸ்வினி (24). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், பல ஆண்டுகளாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக முயற்சி செய்து வருகிறார். 2 முறை சொர்ப்ப மதிப்பெண்களில் தேர்ச்சியை தவறி விட்டார். அவருக்கு திருமணம் முடிந்தது. தற்போது அவர் இரண்டரை மாத கர்ப்பிணி. இந்நிலையில், சமீபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடந்தது. இதில், அஸ்வினி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த 11ம் தேதி கலபுர்கி மாவட்டம். கே.ஆர் பேட்டையில் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. எழுத்து தேர்வில் வெற்றி வெற்ற அவர், இந்த வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் தேர்ச்சி பெற முடியாது என்று நினைத்தார். இதனால், கர்ப்பத்தையும் பொருட்படுத்தாமல் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள முடிவு செய்தார். 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடத்தில் ஓடி கடக்கும் தேர்வில் பங்கேற்றார். இந்த தூரத்தை அவர் 1.36 நிமிடத்தில் கடந்து வெற்றி  பெற்றார். இதன் மூலம்,  உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றார். இதுவரை கர்நாடகத்தில் கர்ப்பிணிகள் யாரும் இதுபோன்று போலீஸ் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: