சிமோனாவை வீழ்த்திய டேனியலி: நேஷனல் பேங்க் ஓபன் காலிறுதியில் போபண்ணா

மான்ட்ரியல்: கனடாவில் நடைபெறும் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீரர் போபண்ணா இணை தகுதி பெற்றுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்கிய சிமோனா முதல் ஆ ட்டத்திலேயே டேனியலியிடம் தோற்று வெளியேறினார். ஆடவர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் ரோகன் போபண்ணா(இந்தியா), இவான் டோடிக்(குரோஷியா) இணை, சிமோன் போலேலி(இத்தாலி), மாக்சிமோ கொவசலேஸ்(அர்ஜென்டீனா) இணையை எதிர்கொண்டது. அதில் போபண்ணா இணை 6-4, 6-3 என நேர் செட்களில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் ஒரு மணி 12 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கரோலினா பிளிஸ்கோவா(செக் குடியரசு), அரினா சபாலங்கா(பெலரஸ்), ஆன்ஸ் ஜெபயூர்(துனிசியா) ஆகியோரும், ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டீகோ ஸ்வார்ட்ஸ்மன்(அர்ஜென்டீனா), பாடிஸ்டா அகுத்(ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை(5வது ரேங்க்) 2-1 என்ற செட்களில் பிரிட்டன் வீராங்கனை ஜோகன்னா கொன்டா(41வது ரேங்க்) வீழ்த்தினார்.

அதேபோல் காயத்தில் இருந்து மீண்ட பிறகு சிமோனா ஹாலேப்(13வது ரேங்க்) 3 மாதங்களுக்கு பிறகு மகளிர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கினார். நேரடியாக 2வது சுற்றில் விளையாடிய சிமோனா 1-2 என்ற செட்களில் அமெரிக்க வீராங்கனை டேனியலி கொல்லின்சிடம்(28வது ரேங்க்) தோற்று வெளியேறினார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மே மாதம் நடந்த இத்தாலி ஓபன் 2வது சுற்றின் பாதியில் சிமோனா வெளியேறினார். அதனால் அவர் பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் ஓபன் மற்றும், ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்கவில்லை. நீண்ட நாட்களாக விளையாடததால், அவர் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories: