திருவள்ளூரில் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கிளை துவக்க விழா: அமைச்சர்கள் ஆவடி சா.மு.நாசர், செஞ்சி மஸ்தான் பங்கேற்பு

திருவள்ளூர்: தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகள் கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட கிளை துவக்க விழா திருவள்ளூர் ஷாலோம் பேராலயத்தில் நடந்தது. கூட்டமைப்பின் நிறுவனர், மாநில தலைவர் லியோ நெல்சன் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் மைக்கேல் வரவேற்றார். மாநில நிர்வாகி பாதிரியார் சுரேஷ் ஜோஸ்வா, ரூவா முன்னிலை வகித்தனர். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கிளையை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினர்.

இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அசோகன், பிஷப் டி.தயானந்தன், ரெலவன்ட் ஜேகப் கோஷி, ரெலவன்ட் ஆல்வின் தாமஸ் மற்றும் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நிருபர்களிடம் கூறுகையில், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வருகின்ற பட்ஜெட் கூட்ட தொடரில் முதலமைச்சர் அறிவிப்பார். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் குழந்தைகள் கல்வி அறிவு பெறுவதற்கும், நியாயவிலை கடைகளில் பொருட்கள் பெறுவதற்கும், அவர்களின் வீடுகள் சீரமைத்து தரும் நிலையை உருவாக்கப்படும்.

தமிழகத்தில் வக்பு வாரிய சொத்துக்கள் தொடர்ந்து கண்காணித்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஊழல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, ‘மோடியால் மட்டுமே தன்னை காப்பாற்ற முடியும்’ என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதால் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். தமிழகத்தில் திமுக, சட்டத்தை நிலைநிறுத்தும் அரசாக இருந்து வருகிறது’ என்றார்.

Related Stories: