பாரிஸ்: அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி (34 வயது), ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பார்சிலோனா கிளப் அணிக்காக தனது 13வது வயதில் இருந்து தற்போது வரை விளையாடி வந்தார். அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸி, சமீபத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலான ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து வேறு அணியில் சேர முடிவு செய்தார். பார்சிலோனா அணியில் இருந்து விலகுவதை கண்ணீர் மல்க அறிவித்த அவர், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கிளப் அணியில் சேர உள்ளதாக தகவல் வெளியானது.