மேஜர் தயான் சந்த் பெயரில் அளிக்கப்படும்: ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்படும்: கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பிரதமர் மோடி திடீர் அதிரடி'

புதுடெல்லி: ‘ராஜீவ் கேல் ரத்னா விருது,’ இனிமேல் ‘மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என்ற பெயரில் வழங்கப்படும்,’ என பிரதமர் அறிவித்துள்ளார். விளையாட்டு துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, கடந்த 1991 - 1992-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விருதின் பெயரை பிரதமர் மோடி திடீரென மாற்றியுள்ளார்.

‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா’ என்ற பெயரில் வழங்கப்படும்,’ என்று அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கேல் ரத்னா விருதுக்கு மேஜர் தயான்சந்த் பெயரை மாற்றும்படி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்தன. அவர்களுடைய கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என்ற பெயரில் வழங்கப்படும் ,’ என்று பதிவிட்டுள்ளார். மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேஜர் தயான் சந்த் யார்?

மேஜர் தயான் சந்த் ஒரு சிறந்த ஹாக்கி வீரர். 1926 முதல் 1949ம் ஆண்டு வரை சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடினார். இவர் 185 போட்டிகளில் 570 கோல்கள் அடித்தார். அலகாபாத்தில் பிறந்த தயான் சந்த் பங்கேற்ற 1928, 1932 மற்றும் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

Related Stories: