'ஆட்டோ மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும்'!: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்களாக செயல்படுகிறது. அதிகமான ஆட்களை ஏற்றி செல்கின்றனர். மேலும் மீட்டரை மாற்றி அமைக்கின்றனர்.

எனவே மீட்டர் பொறுத்தாத ஆட்டோ, டாக்சிகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள் மக்களிடம் மோசடியாக அதிக கட்டணம் வசூலிக்கப்பட கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஷேர் ஆட்டோக்கள் மினி பஸ்களாகவும், மினி பஸ்கள் பேரூந்துகளாகவும் இயங்குவதை தடுக்க வேண்டும். வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு ஆட்டோக்களில் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளதா? ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றி சொல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்கும் போது முறையாக இருக்கிறதா? என்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்து தன்னுடைய உயர் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: