பாளையம்- செஞ்சேரி மேம்பாலம் கட்டும் பணி விபத்தை தடுக்க பேரிகார்டுகளில் ரிப்லெக்டர் பொருத்த வேண்டும்

*வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

பெரம்பலூர் : பெரம்பலூர் துறையூர் நெடுஞ்சாலையில் ஏற்கனவே அரசுத் தலைமை மருத்துவமனை தொடங்கி, செஞ்சேரிசெட்டிக்குளம் பிரிவு ரோடு வரை சென்டர் மீடியன் அமைத்து இருவழிச்சாலையாக மாற்றி பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தற்போது பெரம்பலூர்- துறையூர் சாலையில், செஞ்சேரி செட்டிக்குளம் பிரிவு ரோடு தொடங்கி, துறையூர் புறவழிச்சாலை வரையிலான 30கிமீ தூரமுள்ள சாலை, குரும்பலூர், நக்கசேலம் புறவழிச்சாலைகள், மேம் பாலங்கள் ஆகியவற்றுடன் விரிவுபடுத்தப்பட உள்ளது.

 இதனையொட்டி பளையம் செஞ்சேரி இடையேயுள்ள சிறு ஓடையில் இருந்த பழமையான தரைப்பாலம் அகற்றப்பட்டு விரிவுபடுத்தப்ப ட்ட மேம்பாலம் அமைத்திட கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் வடபுறம் தற்காலிக மாற்று வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகளுக்காக வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல சாலையின் மேற்கிலும், கிழக்கிலும் வைத்துள்ள பேரிகார்டுகளில் இரவு நேரங்களில் தடுப்பு உள்ளதைக் கண்டறியும் ரிப்லெக்டர்கள் தேவையான அளவுக்கு வைக்கப்படாமல் உள்ளது.

 இதனை தெரிவித்து சரிசெய்ய ஏதுவாக தமிழ் தெரிந்த வேலையாட்கள் அங்கே இல்லாததால் இப்பிரச்னைக்குத் தீர்வுகாண ப்படாமல் உள்ளது.பணிகள் தொடங்கிய 2வ து வாரத்திலேயே பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் பேரிகார்டு முன்பு நடந்த விபத்தி ல் படுகாயமடைந்து பலியானார். எனவே புதிதாக ரிப்லெக்டர் இல்லாத காரணங்களால் மேலும் அந்த பாலத்தின் அருகே உயிர்ப்பலி நேராதிருக்க விரைந்து இரவி ல் ஒளியை எதிரொலிக்கக் கூடிய ரிப்லெக்டர்களை ஒட்டி வைத்து வாகன ஓட்டிகளின் அச்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பலரும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாள ருக்கும், மாவட்ட கலெக்ட ருக்கும் வேண்டுகோள் வி டுத்துள்ளனர்.

Related Stories: