திருப்பதி கோயிலுக்கு கொப்பரை நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ1.50 லட்சம் மதிப்பிலான கொப்பரை நன்கொடையாக வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கோயிலுக்கு தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, நேற்று ஏழுமலையான் கோயிலில் உண்டியலுக்காக பயன்படுத்தப்படும் கொப்பரையை திருப்பதி அடுத்த கொப்பரவந்தலா கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மற்றும் குமார் ஆகியோர் இணைந்து கோயில் அதிகாரிகளிடம் நன்கொடையாக வழங்கினர்.

தாமிரம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் 60 கிலோ எடையில் தயார் செய்யப்பட்ட அண்டாவின் மதிப்பு ரூ1.50 லட்சம் என நன்கொடையாளர்கள் தெரிவித்தனர். மேலும், 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழுமலையானுக்கு கொப்பரையை நன்கொடையாக வழங்கி வருவதாக தெரிவித்தனர்.

Related Stories: