மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என சமனிலை பெற்றது. இந்நிலையில், 3வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடினார்.