திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம் கொரோனா 3வது அலை எதிர்கொள்ள ஏற்பாடுகளை செய்ய வேண்டும்-மருத்துவமனை கண்காணிப்பாளர் பேச்சு

திருப்பதி : திருப்பதி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் 3வது அலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் பேசினார்.ஆந்திராவில் கொரோனா 2வது அலை கடந்த மார்ச் மாதம் வேகமெடுத்தது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதனை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது.

தொடர்ந்து, கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா 3வது அலை வர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ெகாரோனா 3வது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்று எச்சரித்துள்ளது. இதனால், கொரோனா 3வது அலையை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திருப்பதி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா 3வது அலையை தடுக்க தேவையான தடுப்பு வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் நாக முன்ந்திரா தலைமை தாங்கி பேசுகையில், `கொரோனா 3வது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது.

நாம் 3வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். ேதவையான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து இல்லையென்றால் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், நோய் பாதிப்பை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதில் குழந்தைகள் பிரிவு மருத்துவர்கள் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: