திருப்பத்தூர் பஜாரில் வணிக நிறுவனங்கள், வளாகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு-விதிமீறியவர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் பஜார் பகுதி களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமீறி செயல்பட்டவர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும்பாலான நகரப்பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட், அனைத்து வகையான வணிக வியாபார கடைகள், இறைச்சி கடைகள், அனைத்து மத வழிப்பாட்டு தலங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களிலும் பொதுமக்கள் முகக்கசவம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைபிடிக்காமலும் இருப்பது   கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் அனைத்து இடங்களிலும் வெளியில் செல்லும்போதும் பொது இடங்களிலும், வியாபார கடைகளிலும், வழிபாட்டு தலங்களிலும் முகக்கவசம் அணியவும். சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்றிடவும்,  அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் மீது முகக்கசவம் அணியாதவர்களுக்கு ₹200ம், சமூக இடை

வெளியினை பின்பற்றாதவர்களுக்கு ₹500ம்,  குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பெரிய வணிக கடைகள் மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு ₹5000ம் அபராதம் விதிக்கப்படும் எனவும் இதனை மாவட்டத்தில் உள்ள சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், அனைத்து வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் துறையினர் மற்றும் மருத்துவதுறையினர் இணைந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கலெக்டர் அமர் குஷ்வாஹா, சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தாசில்தார் சிவப்பிரகாசம் ஆகியோர் திருப்பத்தூரில் நகரின் முக்கிய பகுதிகளான பஜார், ஜின்னா ரோடு, சின்ன கடை வீதி, பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி ரோடு, வாணியம்பாடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததாகவும் சுமார் ₹10,000 வரை அபராதம் விதித்தார். மேலும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அறிவுரை கூறி முகக்கவசம் அணிந்து கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். கலெக்டரே வீதி வீதியாக அதிரடி சோதனை நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: