வாஷிங்டன்: கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அமெரிக்க இளம் டென்னிஸ் வீராங்கனை கோகோ காஃப் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். நடால், ஃபெடரர், செரினா வில்லியம்ஸ், சிமோனா ஹாலேக் போன்ற டென்னிஸ் பிரபலங்கள் பல்வேறு காரணங்களுக்காக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க போவதில்லை என அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 17 வயது வீராங்கனை கோகோ காஃப் ஒலிம்பிக்கில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.