கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

சென்னை: காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இன்று வரை உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின்  திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர். காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்திலும், அவர் வசித்த இல்லத்திலும் பிறந்தநாள் விழாவானது தமிழக அரசால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கும் பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Related Stories: