திமுக சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

திருப்போரூர்: திருப்போரூர் வடக்கு ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. திருப்போரூர் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ இதயவர்மன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை ஆகியவை வழங்கினார். வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் வாசுதேவன், கிளை செயலாளர்கள் தி.க.பாளையம், அன்பு, ராஜர், அசுந்தன், மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரவீன்குமார், மகளிரணி துணை அமைப்பாளர் மதுமிதா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை நிர்வாகி மோசஸ் நன்றி கூறினார்.

Related Stories: