தமாகா முன்னாள் மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் காங்கிரசில் இணைந்தார்: கே.எஸ்.அழகிரி முன்னிலையில் விரைவில் இணைப்பு விழா

சென்னை:  தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இடம் பெற்று 6 தொகுதிகளில் போட்டியிட்டது.இதைத் தொடர்ந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் தமாகாவில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில், தமாகாவில் இருந்து யாரும் மாற்று கட்சிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக சமீபத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையில், தமாகாவில் இருந்து பிரிந்து சென்ற அதிருப்தியாளர்களை காங்கிரசில் மீண்டும் சேர்ப்பதற்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தென்சென்னை கிழக்கு மாவட்ட தமாகா தலைவராக பதவி வகித்து வந்த கொட்டிவாக்கம் முருகன் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். அவருடன் தமாகா இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் மற்றும் நிர்வாகிகள் மயிலை பழனி, ஜெயராஜ், அன்பு தேசிகன், ஜான்சன், மயிலை கர்ணன், வினோத், ராபர்ட், கோவிலம்பாக்கம் சந்திரசேகர், நன்மங்கலம் செந்தூர் முருகன், கவுதம், செம்மை பாலா, பாலவாக்கம் கோபி, பாபு, ஆர்.டி.பாஸ்கர், மார்க்கெட் சந்துரு, வெற்றிவேல், பாலாஜி உட்பட பலரும் காங்கிரசில் இணைந்தனர். விரைவில் தென் சென்னை கிழக்கு மாவட்ட, சர்க்கிள், வட்ட நிர்வாகிகளுடன் இணைப்பு விழா சிறப்பாக நடத்துவதற்கும் கே.எஸ்.அழகிரி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இணைப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: