முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் லியோனி

சென்னை:  தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் பணிகள் செம்மையாக தொடர்ந்து மேற்கொள்ள இந்த நிறுவனத்துக்கு புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை அரசு நியமித்துள்ளது. புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதற்கு பிறகு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட புத்தகங்களை முன்னுதாரணமாக வைத்து பாடநூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற சொல் மாற்றப்பட்டு இனி வரும் காலங்களில் ஒன்றிய அரசு என அச்சிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் கல்லூரிச் சாலையில் டிபிஐ வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அலுவலகத்துக்கு சென்ற அவர்  தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related Stories: