பவானிசாகர் அணை பூங்காவில் நுழைந்த காட்டு யானைகள்

*மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து துவம்சம்

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா  அமைந்துள்ளது.  இந்த  நிலையில்  பவானிசாகர் அணையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் வசிக்கும் 2  காட்டு  யானைகள் நேற்று முன்தினம் இரவு வனத்தை விட்டு வெளியேறி பவானிசாகர்  அணை  பூங்கா பகுதிக்கு வந்தன.

பூங்காவின் சுற்றுச்சுவரை உடைத்த காட்டு   யானைகள் பூங்காவிற்குள் புகுந்து அழகுக்காக வளர்க்கப்பட்ட மரங்களை   தும்பிக்கையால் முறித்தும், வேருடன் சாய்த்தும் சேதப்படுத்தின. அணை   பூங்காவில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்ட இரவுப்பணியில் இருந்த   பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து உடனடியாக  விளாமுண்டி  வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த   வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து 2 மணி நேரம் போராடி காட்டு யானைகளை   விரட்டியடித்தனர்.

Related Stories: