குற்றவாளி தப்பித்தால் சுடுங்க! - அசாம் முதல்வர் பேச்சு

கவுகாத்தி: குற்றவாளிகள் போலீசின் பிடியில்  இருந்து தப்பிக்க முயன்றால் அவர்கள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்துங்கள் என்று போலீசாரிடம் அசாம் முதல்வர் பேசினார். அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக பதவியேற்றதிலிருந்து, மாநிலத்தில் போலீசாரால் நடத்தப்படும் என்கவுன்டர்களை நியாயப்படுத்தி பேசிவருகிறார். இவர் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் ஒரு டஜன் போராட்டக்காரர்கள், குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அனைத்து காவல் அதிகாரிகள் மாநாட்டில் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், ‘குற்றவாளிகள் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றாலோ அல்லது காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறிக்க முயன்றாலோ, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துங்கள். இதுபோன்ற நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அவரின் காலில்தான் சுடவேண்டும்; மார்பில் சுடக்கூடாது.

சட்டம் எதைச் செய்ய அனுமதிக்கிறதோ, அதனை மக்களின் நலன்கருதி மனசாட்சியுடன் செயல்பட வேண்டும். பாலியல் பலாத்கார குற்ற வழக்கில்தொடர்புடையவர்கள் மீது விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை பெற்றுத் தரவேண்டும்’ என்று பேசினார்.

Related Stories: