டிவில்லியர்ஸ், கோஹ்லி, பாபர் எனக்கு பிடித்த வீரர்கள்: ஷாகித் அப்ரிடி பேட்டி

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகி்த் அப்ரிடி யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி: நான் எப்பொழுதும் இன்ஜமாம் உல் ஹக் மற்றும் சயீத் அன்வருடன் ஆடியதை மிகப் பெருமையாக நினைக்கிறேன். என்னுடைய காலத்தில் பிரைன் லாரா மற்றும் மெக்ராத் ஆகிய இருவரும் எனக்கு மிகவும் பிடித்த வீரர்கள். இந்த காலத்தில் எனக்குப் பிடித்த வீரர்கள் டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி மற்றும் பாபர் அசாம்.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வீரரான பக்கர் சமான் சிறப்பாக விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தான் அணி எப்பொழுதும் வெற்றி பெறும். ஆனால் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட முடியாதது எனக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: