காஞ்சிபுரம் நகராட்சியின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகராட்சியின் 6 பகுதிகளில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொண்டனர். கொரோனா தொற்றை ஒழிக்க கடைசி ஆயுதமாக கருதப்படும் தடுப்பூசி முகாம், அனைத்து பகுதிகளிலும் நேற்று வரை நடைபெற்று வந்தன. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், அந்தந்த பகுதி மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். பெருநகராட்சி 49வது வார்டு வேதாசலம் நகர் செல்வவிநாயகர் ஆலயம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்த மக்கள், ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தடுப்பூசி வந்த நிலையில் நேற்று முதல் காஞ்சிபுரத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனை தவிர்த்து மற்ற  26 ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 36 சிறப்பு தடுப்பூசி முகாம்களில்  தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1,95,650 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் 1.20 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் நகராட்சியில் நடந்த சிறப்பு முகாம்களில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Related Stories: