பெட்ரோல்-டீசல், காஸ் விலையை உயர்த்தி மக்கள் மீது தொடர்ந்து பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது: ஒன்றிய அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமை தாங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவாகவும்- மத்திய அரசின் வரிவிதிப்பு கொள்கை காரணமாகவும் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து 1 லிட்டர் ரூ.100ஐ தாண்டிச் சென்றுள்ளது.

 கொரோனா தொற்று முழுமையாக நீங்காத நிலையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை சகஜ நிலைக்கு திரும்பாத சூழலில், வாழ்வாதாரம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் சமையல் கியாஸ் ஒரு சிலிண்டருக்கான விலை ரூ.25.50 உயர்வு ஏற்பட்டுள்ளது. உண்மையில் கடந்த 7 மாதங்களில் ரூ.240 உயர்ந்து, தற்போதைய உயர்வும் சேர்ந்தால் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.விலையுயர்வை கைவிட கோரியும்-மானியத்தை அதிகரிக்க கோரியும் கண்டனக்குரல்கள் முழங்கட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளை அறைகூவி அழைக்கிறது.

தடுப்பூசிகளை தனியாருக்கு ஒதுக்கீடு செய்த அளவை குறைத்து, தமிழக அரசு கோரிய அளவிற்கு தடுப்பூசிகளை ஒன்றிய அரசு கால தாமதமின்றி ஒதுக்கீடு செய்திட வேண்டும். கடந்த ஆட்சி காலத்திலிருந்து மருத்துவர்கள் தங்களின் ஊதிய உயர்வுக்காக குரல்கொடுத்தும், போராடியும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை காலத்தே தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும். கர்நாடக அரசு- பெண்ணையாற்றில் புதிய அணை தமிழக அரசு ஊரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: