இந்தியா - சீனா எல்லையான சிக்கிமில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர் தேவஆனந்த் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்

திருச்சி: இந்தியா - சீனா எல்லையான சிக்கிமில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர் தேவஆனந்த் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த திண்ணியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்தோணிராஜ் ராஜம்மாள் தம்பதியின் மகன் தேவஆனந்த்(25). ராணுவ வீரரான இவர் தற்போது  சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று முன்தினம் சிக்கிம் சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.  பணியை முடித்து விட்டு  தங்கியிருந்த இடத்துக்கு ராணுவ டிரக்கில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது வாகனம் திடீரென தடம் புரண்டு மலையில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் பயணம் செய்த தேவஆனந்த் உள்பட 6 பேர் ராணு வீரர்கள் பலியாகினர். தேவஆனந்த் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இந்நிலையில் இந்தியா - சீனா எல்லையான சிக்கிமில் உயிரிழந்த தமிழ்நாடு ராணுவ வீரர் தேவஆனந்த் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories: