கொரோனா கால கட்டுப்பாடு கெடுபிடி மக்களிடம் அபராதம் வசூலித்து கஜானா நிரப்பிய குஜராத் அரசு: மாஸ்க்கால் மட்டுமே ரூ.252 கோடி கிடைத்தது

அகமதாபாத்: கொரோனா பரவலை  தடுப்பதற்காக, மாஸ்க் அணிதல், தனி மனித இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை மீறுபவர்களிடம்  போலீசார் அபராதம்  வசூலிக்கின்றனர். இந்நிலையில், குஜராத்தில் கடந்தாண்டு ஜூன் 24ம் தேதியில் இருந்து இந்தாண்டு ஜூன் 28ம் தேதி வரையிலான ஓராண்டில், மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து மட்டுமே ரூ.252 கோடி அபராதத்தை போலீசார் வசூலித்துள்ளனர்.  இது தொடர்பாக மொத்தம் 37.42 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிகப்பட்சமாக அகமதாபாத்தில் ரூ.53.21 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 2ம் இடத்தில் ராஜ்கோட் ரூ.25.21 கோடி, 3ம் இடத்தில் சூரத் ரூ.22.94 கோடி, 4ம் இடத்தில் வதோதரா ரூ.15.58 கோடி, 5ம் இடத்தில் பனஸ்கந்தா ரூ.8.87 உள்ளன.  இது தவிர, ஊரடங்கு காலத்தில் வாகனங்களில் சுற்றியவர்களிடம் இருந்தும் ரூ.101 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்கள், திருமண மண்டபம், விழாக்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றாததற்காக 5.13 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,  பல கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எவ்வளவு தொகை என்பது கூறப்படவில்லை.

Related Stories: